தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குருப் 2, 2 ஏ காலிப்பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்பும் அறிவிப்பினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 2,327 காலிப்பணியிடங்களுக்கான இத்தேர்வினை பட்டதாரிகள் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
குருப் 2 காலிப்பணியிடம் | 507
குருப் 2 ஏ காலிப்பணியிடம் | 1820
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பினை முடித்தவர்கள் இத்தேர்வினை எழுதலாம்
ஒரு சில பணிகளுக்கு என்று சில படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்ச வயது 18 ஆகும். பணியின் நிலைகளுக்கு ஏற்ப ஒரு சில பதவிகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப பதிவு தொடக்கம் | 20.06.2024
விண்ணப்ப பதிவு நிறைவு | 19.07.2024
விண்ணப்பம் திருத்தும் காலம் | 24.07.2024 முதல் 26.07.2024
முதல் நிலைத் தேர்வு | 14.09.2024
முதன்மைத் தேர்வு (மெயின் தேர்வு) | முதல் நிலைத் தேர்வு வெளியான பின்னர், அறிவிக்கப்படும்.
இத்தேர்வு குறித்த முழுமையான அறிவிக்கையை tnpsc group 2 & 2 A service notification என்பதை கிளிக் செய்து பார்க்கலாம்.
பொது ஆங்கிலம் தகுதி தேர்வு பாடத்திட்டம் Combined Civil Services (Preliminary) Examination- Group-II and IIA Services_General English_sslc_std
முதல் நிலைத் தேர்வு பொது அறிவு பாடத்திட்டம் Combined Civil Services (Preliminary) Examination- Group-II and IIA Services_General Studies_UG_std
தமிழ் தகுதி தேர்வு பாடத்திட்டம் General Tamil_sslc_std_Combined Civil Services (Preliminary) Examination- Group-II and IIA Services
COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (INTERVIEW POSTS AND NON-INTERVIEW POSTS) IN GROUP-II AND IIA SERVICE : தேர்வு தேதி : 21/05/2022 FN (Prelims) & Date of Main Examination – 25.02.2023
பொது அறிவு வினாத்தாள் Combined Civil Services (Preliminary) Examination- Group-II and IIA Services_General Studies – CCS2E – 2022 – Answer Key_opt
பொது ஆங்கிலம் வினாத்தாள் Combined Civil Services (Preliminary) Examination- Group-II and IIA Services_General English – CCS2E – 2022 – Answer Key_opt
பொதுத்தமிழ் தகுதித்தாள் Combined Civil Services (Preliminary) Examination- Group-II and IIA Services_General Tamil – CCS2T – 2022 answer key_opt