Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114
காரைக்குடியில் மத்திய அரசு வேலை ! எழுத்து தேர்வு இல்லை ; நேர்முகத்தேர்வு உண்டு - Madras Murasu
spot_img
More
    முகப்புUncategorizedகாரைக்குடியில் மத்திய அரசு வேலை ! எழுத்து தேர்வு இல்லை ; நேர்முகத்தேர்வு உண்டு

    காரைக்குடியில் மத்திய அரசு வேலை ! எழுத்து தேர்வு இல்லை ; நேர்முகத்தேர்வு உண்டு

    காரைக்குடியில் மத்திய அரசு நிறுவனத்தில் 36 காலிப்பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான மத்திய மின்வேதியியல் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அப்ரண்டீஸ் என்கிற தொழில் பழகுநர் பணிக்கு ஆள் சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    ஐடிஐ, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு முடித்தோர், நேரில் ஆஜராக வேண்டும். அப்போது உரிய ஒரிஜினல் மூலச்சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஐடிஐ படிப்பில் Fitter, Machinist, Electrician, Wireman, Electronics Mechanic, Ref. & A/c Mechanic, Draughtsman (Civil), Turner, Plumber , Carpenter ஆகிய படிப்பினை முடித்துள்ளோருக்கு மாதம் 8050 மாத ஊதியம் வழங்கப்படும்.

    Welder, PASAA படிப்பிற்கு மாதம் 7700 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. UR – 14,  OBC – 07, SC – 05, ST – 01, EWS-02 என்று மொத்தம் 29 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

    டிப்ளமோ என்கிற பாலிடெக்னிக் படிப்பில் Civil Engineering, Mechanical
    Engineering, Electrical & Electronics Engineering , Electronics & Communication
    Engineering என்ற பாடம் படித்தவர்கள் நேர்முகத்தேர்வுக்கு வரலாம். இவர்களுக்கு ஓராண்டு பணி. மாத ஊதியம் ரூ.8000.  UR – 03,  OBC-01, SC – 01 என்று மொத்தம் 5 காலிப் பணி இடம் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Bachelor’s degree (3 Years) in Hospitality and Hotel Administration/ Hotel Management/ Hotel Management and Catering Technology/ Catering Science and Hotel Management or equivalent என்ற படிப்பு முடித்தவர்கள் Guest House and Canteen Management பணி நேர்காணலுக்கு வரலாம். இதில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது பொதுப்பிரிவு ஆகும். மாதம் ரூ.9000 சம்பளம் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோலவே, B.Sc., in Chemistry / Physics படித்தவர்கள் Office Assistance பணிக்கு தகுதியானவர்கள். இதுவும் பொதுப் பிரிவு. ஓர் இடம் உள்ளது.

    நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் – இடம் வருமாறு: Diploma in Mechanical Engineering, ECE, EEE and Civil Engineering, Bachelor’s Degree in Physics / Chemistry and Guest House and Canteen Management | 30.07.2024 from 9.00 am onwards | CSIR- Central Electrochemical Research Institute, College Road, Karaikudi.

    ITI – Fitter, Machinist, Mechanic Ref. & A/c, Welder, Draughtsman (Civil), Plumber, Carpenter | 31.07.2024 from 9.00 am onwards | CSIR- Central Electrochemical Research Institute, College Road, Karaikudi. ITI – Electrician, Wireman, PASAA,
    Electronics Mechanic, Turner. 01.08.2024 from 9.00 am onwards | CSIR- Central Electrochemical Research Institute, College Road, Karaikudi.

    Date & Time of Walk-in-Interview: 30.07.2024 to 01.08.2024 at 09.00 AM (Reporting Time: 08.45 AM). No candidate will be allowed to enter into the venue after 09:00 AM.

    இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிக்கையை APP-06-2024_AdvtCopy இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.  மேலும் கூடுதல் தகவல் பெற  04565 – 241219 / 218 என்ற எண்களில் அலுவலக நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை பேசலாம்.  recruit@cecri.res.in என்ற email id மூலமாகவும் விபரம் கேட்கலாம்.

    கல்வி சான்றிதழ்கள் அனைத்தின் மூலசான்றுகளையும் வைத்திருக்க வேண்டும். ஜெராக்ஸ் எடுத்தும் வைத்திருக்க வேண்டும். ttps://www.cecri.res.in/ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பயோடேட்டாவை பிரிண்ட் எடுத்து நிரப்பிக் கொண்டு, நேர்முகத்தேர்வு அன்று காலை 8.45 மணிக்கு முன்னர் நேர்முகத்தேர்வு இடத்தில் இருக்க வேண்டும். பயோடேட்டாவை APP-06-2024_Application (1) இந்த தளத்தில் டவுன்லோடு செய்யலாம்.

     

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments