அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் பாடம் வாரியாக இருக்கும் சீட்களின் எண்ணிக்கையினை சாதிவாரியாக பிரித்து புள்ளி விபரங்களுடன் பொதுவெளியில் கிடைத்துள்ளது. இந்த சீட்களின் விபரம், அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங் மூலம் சேரும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2024 ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வினை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது https://www.tneaonline.org/ . அரசு பள்ளிகளில் பயின்ற சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜுலை 22 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி முடிகிறது.
பொதுப்பிரிவு சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜுலை 25 ஆம் தேதி தொடங்கி 27 ல் முடிகிறது. பொதுக் கலந்தாய்வு ஜுலை 29 ல் தொடங்கி செம்டம்பர் 3 ஆம் தேதி முடிகிறது. துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 ல் தொடங்கி 8 ல் முடிகிறது.
அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒவ்வொரு கல்லூரியிலும் இட ஒதுக்கீடு சாதி வாரியாக உள்ள இடங்களை பார்க்க GENERAL_ACADEMIC_SEAT_MATRIX_2024 இங்கே கிளிக் செய்து படிக்கவும்.
இதுகுறித்து புதுவாழ்வு அறக்கட்டளையின் கல்வி ஆலோசகர்கள் கூறுகையில், ‘’சீட் மேட்ரிக்ஸ் எனப்படும் இந்த கல்லூரி வாரியான இந்த புள்ளி விபரம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகவு பயனுள்ளது. இதுபோல, நிர்வாக ஒதுக்கீட்டு சீட் விபரங்களையும் கல்லூரிவாரியாக இட ஒதுக்கீடு சாதி வாரியாக வெளியிட வேண்டும்’ என்றனர்.