உதவிப் பேராசிரியர் வேலைக்கான TAMILNADU STATE ELIGIBILITY TEST-க்கு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கலை, அறிவியல் பாடங்களில் முதுநிலை படிப்பினை முடித்தவர்கள் இத்தேர்வினை எழுதலாம். விண்ணப்பத்தாரருக்கு எத்தனை வயது என்றாலும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசியர் வேலையில் சேர வேண்டும் என்றால் University Grants Commission, Council of Scientific & Industrial Research ஆகியவை நடத்ததும் National Eligibility Test -ல் பாஸ் ஆகி இருக்க வேண்டும். அல்லது, அந்தந்த மாநில உயர்கல்வித்துறை நடத்தும் STATE ELIGIBILITY TEST-ல் பாஸ் ஆக வேண்டும்.
நெட் தேர்வில் பாஸ் ஆனவர்கள் நாடு முழுவதும் உதவிப் பேராசிரியர் பணியில் சேர முடியும். ஆராய்ச்சி படிப்க்கு உதவித்தொகை பெறவும் இந்த நெட் தேர்வு சான்றிதழ் பயன்படும். மாநில அரசுகள் நடத்தும் STATE ELIGIBILITY TEST -ல் பாஸ் ஆகிறவர்கள், அந்தந்த மாநிலத்திற்குள் இருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசியர் பணியில் சேர முடியும்.
அந்த வகையில், தமிழக உயர்கல்வித்துறை சார்பில் உதவி பேராசியர் தகுதி தேர்வினை இந்த ஆண்டு, திருநெல்வேலியில் உள்ள மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதியில் தொடங்கும் விண்ணப்ப பதிவு, ஏப்ரல் 30 ஆம் தேதி முடிவடைகிறது.
முதுநிலை படிப்பு முடித்துள்ளோர், முதுநிலை படிப்பில் இறுதி செமஸ்டர் தேர்வினை எழுத இருப்போரும் இந்தத் தேர்வினை எழுதலாம். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகிய பிரிவுகளில் வரும் விண்ணப்பத்தாரர் முதுநிலை படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பொதுப்பிரிவின் கீழ் வரும் விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் 2,500 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் என்ற பிரிவின் கீழ் வருவோர், 2 ஆயிரம் ரூபாயும் ஆதிதிராவிடர், அருந்ததியர், மாற்றுத்திற்னாளிகள் 800 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்கள், கட்டணம் செலுத்த வேண்டாம்.
கலை, அறிவியல் பிரிவுகளில் மொத்தம் 43 பாடங்களுக்கு உதவிப் பேராசியர் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. கொள்குறி வகையிலான இந்த தேர்வில் முதல் பேப்பர் அனைவருக்கும் பொதுவானது. மொத்தம் 50 கேள்விகள் கேட்க்கப்படும். இரண்டாம் பேப்பர் என்பது அவரவர் படித்த பாடத்தை சேர்ந்தது. பாடப்பகுதியில் இருந்து 100 கேள்விகள் கேட்க்கப்படும். இத்தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி வரை https://msutnset.com/ என்ற இணையத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு ஜூன் 3 ஆம் தேதி முதல், ஜுன் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு குறித்த முழு அறிவிப்பை படிக்க இங்கே கிளிக் TNSET2024_Notifications செய்யவும்