தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 654 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பட்டதாரிகள் ஜூலை 26 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கான போட்டித் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் ‘ தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு மற்றும் திறனறியும் மனக்கணக்கு ‘ ஆகிய பாடங்களில் இருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்க்கப்படும். இரண்டாம் தாள் என்பது அவரவர் பாடம் சம்பந்தபட்டது. இந்த வினாத்தாளும் கொள்குறி வகையில்தான் இருக்கும். நேர்முகத்தேர்வு கிடையாது. தேர்வில் எடுக்கும் மார்க் அடிப்படையில் வேலைக்கான உத்தரவு வழங்கப்படும்.
தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு மற்றும் திறனறியும் மனக்கணக்கு ஆகிய தேர்வுகள் அக்டோபர் 26 ஆம் தேதி காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடக்கும். பாடம் சம்பந்தப்பட்ட, இரண்டாம் பேப்பர் என்பது 14 முதல் 23 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடக்கும். அந்த தேதி, பாடம் வாரியாக தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர்களுக்கு தனித்தனியே தகல் கொடுக்கப்படும்.
காலிப் பணியிடம், வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்தல் குறித்த அறிக்கையை தமிழ்வடிவில் படிக்க 09_2024_CTS_NONOT_TAMIL_ இங்கே கிளிக் செய்யவும் . ஆங்கில வடிவில் வெளியான அறிவிக்கையை படிக்க இங்கே 09_2024_CTS_NONOT_ENGLISH_ கிளிக் செய்யவும்.
தேர்வு எழுத தகுதியான படிப்பு விபரம்
Agriculture, Archaeology (Degree), Archaeology (PG Degree), Anthropology (Degree), Anthropology (PG Degree), Architecture, Basics of Engineering, Bio Chemistry , Bio-Technology, Botany (Degree), Botany (PG Degree), Business Administration, Chemical Technology, Chemistry (Degree), Chemistry (PG Degree), Chemical Engineering, Civil Engineering, Clinical Pharmacology, Computer Application, Computer Science , Computer Science and Engineering , Dairy Chemistry , Dairy Science , Dairy Technology , Economics , Electrical and Electronics Engineering, Electronics and Communication Engineering, Evaluation and Applied Research , Food Technology / Food Processing , Financial and Cost Accountancy (Intermediate), Geology (Degree) , Geology (PG Degree) , History (Degree) , History (PG Degree), Information Technology , Law , Library and Information Science, Mathematics , Mechanical / Manufacturing / Production Engineering , Microbiology , Microbiology (Medicine) , Pharmacy / Pharmaceutical Sciences, Physics , Sanskrit (Degree) , Sanskrit (PG Degree) ,Statistics , Textile Technology, Town and Country Planning, Travel and Tourism , Translation , Zoology (Degree), Zoology (PG Degree) ஆகிய பாடங்களை படித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
துறைவாரியாக காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விபரம் வருமாறு: