மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதியில் இருந்து மார்ச் 5 ஆம் தேதி வரை, பட்டதாரிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
’’யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன்’’ மத்திய அரசின் உயர்பதவிகளுக்குச் தேவையான அதிகாரிகளை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வை ‘சிவில் சர்வீசஸ் தேர்வு அல்லது இந்தியக் குடிமைப் பணித் தேர்வு’’ என்று அழைக்கிறார்கள். மூன்று கட்டங்களைக் கொண்ட, இத்தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று வெளியாகி விட்டது. மார்ச் 5 ஆ ம் தேதி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
எந்தப் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதலாம். பொதுப் பிரிவினர் 21 வயது முதல் 32 வயது வரை தேர்வெழுதலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 37 வயது வரையும் ஓபிசி என்று அழைக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும்.
பார்வையற்றோர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் போன்ற மாற்றுத்திறன் உடையவர்களுக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகள் சலுகை உண்டு. அதாவது, இவர்கள் 42 வயது வரை இத்தேர்வை எழுதலாம். இதேப்போல், முன்னாள் ராணுவத்தினர் அவர்களின் கம்யூனிட்டிப்படி, உச்சவயது வரம்பில் தளர்வுகள் இருக்கிறது.
பொதுப் பிரிவினர், இத்தேர்வை 6 முறை எழுதலாம். ஓ.பி.சி என்று அழைக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் 9 முறை இத்தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 21 வயது முதல் 37 வரை எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தேர்வை, எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
prelimenary examination, main examination, interview என்று மூன்று கட்டங்களாக குடிமைப் பணிகள் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறுவோர், Indian Administrative Service, Indian Foreign Service, Indian Police Service என்று மொத்தம் 21 நிர்வாக பணிகளில் உயர் அதிகாரிகளாக நியமிக்கபடுவார்கள்.
ஐஏஎஸ் தேர்வு முழு விபரம் பார்க்க கிளிக் செய்யவும் IAS_EXAM_Notification_2024
இந்தாண்டு 1056 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகி விட்டது. நாட்டின் உயர்ந்த அதிகாரம் கொண்ட பெருமை வாய்ந்த இந்தத் தேர்வெழுத விரும்பும் பட்டதாரிகள், மார்ச் 5 ஆ ம் தேதி வரை www.upsc.gov.in) என்ற இணையம் வழியே விண்ணப்பிக்கலாம்.