எஸ்.பி.ஐ வங்கியில் வட்டார அதிகாரி பணியில் 5,280 காலியிடங்களுக்கு ஆள் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஏதேனும், ஒரு டிகிரி-யுடன் பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பணியாற்றிய அணுபவத்துடன் இருப்போர் இந்த தேர்வுக்கு டிசம்பர் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
எஸ்.பி.ஐ வங்கி என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) 5280 வட்டார அதிகாரி (RECRUITMENT OF CIRCLE BASED OFFICERS) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிசம்பர் 12 ஆ தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பிரிவில் சென்னை வட்டத்தில் மட்டும் 125 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பொது பிரிவினருக்கு 53 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 12 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33 இடங்களும், பட்டியல் இனத்தவருக்கு 18 இடங்களும், பழங்குடியினருக்கு 9 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஏதேனும் ஒரு பட்டபடிப்புடன், 31.10.2023 அன்றைய தேதியில், ஏதேனும் பட்டியலிடப்பட்ட வங்கிகளில் 2 ஆண்டுகள் பணி செய்த முன் அனுபவம் இருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 31.10.2023 அன்று 21 வயதில் இருந்து 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிகளின் படி, சாதிவாரியாக வயது வரம்பில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகைகள் உள்ளது.
விண்ணப்பதாரர் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் வட்டாரத்தில் பேசப்படும் உள்ளூர் மொழியில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதாவது தமிழ்நாடு பிரிவில் விண்ணப்பிப்போருக்கு கண்டிப்பாக தமிழ் மொழியில் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஆள் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் நடைபெறும். தவறாக விடைகள் குறிக்கப்பட்டு இந்தால் நெகட்டிவ் மார்க் கிடைதாது. கொள்குறி வகை தேர்வில் வெற்றிபெறுவோர், அடுத்ததாக ஆங்கிலத் மொழித் திறனை சோதிக்கும் கடிதம், கட்டுரை எழுதும் விரிவான எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதையடுத்து நேர்காணல் தேர்வு நடைபெறும். இறுதி பட்டியலில் இடம் பெறுவோர், உள்ளூர் மொழி அறிவு (Language Proficiency Test) சோதனை தேர்வில் வெற்றி பெற வேண்டும். இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் உறுதி செய்யப்படும்.
https://bank.sbi/careers என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தின் வாயிலாக டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். Medical, Engineering, Chartered Accountant, Cost Accountant போன்ற தொழில்சார் படிப்புகளை முடித்து விட்டு வங்கிகளில் வேலை பார்க்கும் விண்ணத்தாரர்களும், முக்கியத்துவம் வாய்ந்த வட்டார அதிகாரி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வட்டார அதிகாரி பணி நியமனத்துக்கு பிறகு அடுத்தடுத்து அதிகாரமிக்க பல பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எனவே, வங்கிகளில் வேலை பார்க்கும் ஜூனியர் லெவல் பணியாளர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 12 ஆம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள்.