சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஜுன் 21-ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த விளம்பரம் மீளப்பெறுவதாக ஜுன் 22-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அந்த வேலைவாய்ப்பு விளம்பரம் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மாதம் ரூ.30,000 சம்பளத்தில் கவுரவ விரிவுரையாளர் தேர்ந்தெடுக்கபட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் இருந்த பிழைகளை சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பின் காரணமாக மறுநாளே அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. கவுரவ விரிவுரையாளர் தேர்வு குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.