இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களை, ‘அரசு ஆதரவு ஹேக்கர்ர்கள்’ குறிவைப்பதாக எம்பிக்கள் உட்பட 10 பேருக்கு ஆப்பிள் நிறுவனமே எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளில் ஒன்று ‘ஐபோன்’ என்ற ஸ்மார்ட்போன் ஆகும்.
இந்த ஐபோன்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் தகவல், தரவு பாதுகாப்பு அம்சங்கள் அதி கம் இருப்பதாக கூறப்படுவதால் இந்தியாவில் பிரதமர் துவங்கி, முதல்வர்கள், அமைச்சர்கள் போன்ற முக்கிய பிரபலங்கள் பலரும் ஐபோன் களையே பயன்படுத்தி வரும் நிலை யில், ஐபோன் மொபைலில் இருக்கும் தகவல்களை ‘ஸ்டேட் ஸ்பான்சர்டு அட்டாக்கர்ஸ்’ (State Sponsored attackers) என்ற ஹேக்கர்கள் மூலம் தகவல்களை திருட முயற்சிப்பதாகவும், செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படு வதாகவும் 4 எம்.பி.க்கள் உட்பட 10 எ திர்க்கட்சித் தலைவர்களுக்கு ‘ஆப்பிள் நிறுவனமே’ எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.
பிரியங்கா சதுர்வேதி
காங்கிரஸ் எம்பி சசிதரூர், திரிணா முல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா, சிவசேனா (யுடிபி) எம்பி பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் தங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை ஸ்கிரீன் ஷாட்டுடன் சமூக வலைத்தளங் களில் பதிவிட்டு குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பேருக்கும் இதேபோன்ற எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “தனக்கு மட்டுமின்றி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா ஆகியோருக்கும் இதே போன்ற எச்சரிக்கைகள் வந்துள்ளன” என குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மூத்தபத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோரின் செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீத்தாராம் யெச்சூரி
ஐபோன் ஒட்டுக்கேட்பு எச்சரிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “திங்களன்று இரவு ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் உங்கள் மொபைல் கண்காணிக்கப்படுகிறது என்றும், உங்கள் தொலைபேசி மற்றும் தொலைபேசியில் உள்ள அனைத்து அமைப்புகளும் “ஹேக்” செய்யப்பட்டு உள்ளது, இதைச் சமாளிப்பது கடி னம் என்று கூறப்பட்டுள்ளது. நமது அர சியலமைப்புச் சட்டத்தின்படி தனியுரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும். அவ்வாறிருக்க ஏன் ஒட்டுக்கேட்பு செய்யப்படுகிறது என்பது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி கண்டனம்
எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். “செல்போன் ஒட்டுக் கேட்பு நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல, குற்றவாளிகள் செய்யும் செயல்” என்று சாடியுள்ளார்.
சிவசேனா கேள்வி
நான் 20 வருடங்களாக ஐபோன் பயன்படுத்துகிறேன். அப்போதெல்லாம் வராத குறுஞ்செய்தி தற்போது வந்துள்ளது ஏன்? என சிவசேனா (யுடிபி) எம்.பி பிரியங்கா சதுர்வேதி கேள்வியெழுப்பியுள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு
இதனிடையே எதிர்க்கட்சித் தலை வர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவ காரம் தொடர்பாக ஒன்றிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக வும். விசாரணைக்கு அனைவரும் ஒத்து ழைக்க வேண்டும் என்றும், விசார ணைக்கு ஒத்துழைக்கும்படி ஆப்பிள் நிறுவனத்துக்கும் கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாக ஒன்றிய தகவல் தொடர்பு, மின்னணுவியல் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் விளக்கம்
கடந்த 2019 இல் இஸ்ரேல் தயாரிப் பான ‘பெகாசஸ்’ போன்ற வேவு மென்பொருள் மூலம் எதிர்கட்சித் தலை வர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.