ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வல நிகழ்ச்சிக்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்காமல் மறுக்க வேண்டும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கு கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளது.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் வரும் 22 மற்றும் 29 தேதிகளில் காக்கி சட்டை மற்றும் கைத்தடிகளுடன் ஊர்வலம் செல்ல அனுமதி கோரி காவல்துறைக்கு விண்ணப்பித்து உள்ளதாக அறிகிறோம்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு வகுப்புவாத அமைப்பு என்பதையும் ஊர்வலம் என்ற பெயரில் கடந்த காலங்களில் அவர்கள் மக்கள் ஒற்றுமையும் மத நல்லிணக்கத்தையும் சீர்குலைத்ததை அறிவீர்கள்.
வரும் 2024 தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை சீர்குலைக்கவும் சிறுபான்மையினர் மத்தியில் ஒரு அச்ச மனப்பான்மையை உருவாக்கவும் அவர்கள் முயற்சித்து வருவதாக தெரிகிறது.
தமிழக காவல்துறை இவர்களின் சதி முயற்சிக்கு இடம் தராமல் தடுக்க வேண்டியது அவசியம் என கருதுகிறோம்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வல நிகழ்ச்சிக்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்காமல் மறுக்க வேண்டும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கு கடிதத்தின் மூலம் வலியுறுத்தல் இச்செய்தியினை தங்களின் மேலான பத்திரிக்கையில் வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.