ஒருவர் குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே அம லாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உள்ளது. விசாரணை நடத்தி, அதன்பிறகு ஆதாரத்தை திரட்டும் புலனாய்வு அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்படவில்லை என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தனது வாதத்தை முன்வைத்துள்ளார். அதேபோல, சோதனை நடத்தி பறிமுதல் செய்வதற்குத்தான் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, காவலில் எடுத்து விசாரிப்ப தற்கும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் என்று கபில் சிபல் கூறியுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை, விசாரித்த நீதிபதி ஜெ. நிஷா பானு, நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்புக்களை வழங்கிய தால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதன்படி மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் செவ்வாயன்று வழக்கை விசாரித்தார்.
இந்த விசாரணையின்போது, “எந்த ஆவணமும் இல்லாதபோது அமலாக்கத் துறைக்கு எங்கிருந்து ஆதாரம் கிடைத்தது? எந்த ஆதாரமும் இல்லாத போது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்தது எப்படி? செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை நிலையில்தான் உள்ளது. நீதிமன்ற காவ லில் வைக்க நீதிமன்றத் துக்கு அதிகாரம் உள்ள போது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்கும்படி அம லாக்கத்துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?” என்று இரண்டு தரப்பிற்கும் கேள்வி களை முன்வைத்தார். அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தில்லியிலிருந்தபடியே, காணொலி மூலம் ஆஜராகி வாதாடினார். அப்போது, செந்தில் பாலாஜியை அம லாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டார்.
“ஒருவர் குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே அம லாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டின் அடிப்ப டையில், அவர் பெற்ற பணத்தை மறைத்து வைத்திருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டம் பிரிவு 19-இன்படி, குற்றம் புரிந்துள்ளார் என நம்பு வதற்கான காரணங்களும், ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே அமலாக்கப்பிரிவு துணை இயக்குநர், உதவி இயக்குநர் கைது நடவடிக்கை எடுக்கலாம். கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கைதுக்கான காரணங்களை தெரிவித்து நீதிமன்ற காவலில் வைக்க கோரலாம். ஆனால், இந்த வழக்கில், கைதுக்கான காரணத்தை அமலாக்கத்துறையினர் தெரியப்படுத்தவில்லை. கைதுக்கான எந்த ஆதாரமும் இல்லை. எதற்காக கைது செய்கிறோம் என்ற விவரங்களை அவரது உறவினர்களுக்குக் கூட தெரியப்படுத்தவில்லை.
இந்த வழக்கில் 2 கேள்விகள் எழுகின்றன. ஒன்று கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? மற்றொன்று இந்த ஆட் கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது. இதில், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என ஆணித்தரமாக கூறுகிறேன்” என்று கபில் சிபல் தனது வாதங்களை அடுக்கினார். அப்போது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் குறுக்கிட்டு, “பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பிரிவு 19-இன் படி, கைது செய்யும் அதி காரம் அமலாக்கத் துறைக்கு உள்ளபோது, அதை இல்லை என்கிறீர்களா? அல்லது காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “’சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது’ என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது” என்பதை சுட்டிக் காட்டிய கபில் சிபல், “இந்த வழக்கை பொருத்த மட்டில், ஏற்கனவே, செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில், போலீஸ் அதிகாரிகள் போல, அமலாக்கத் துறையினர் செயல்பட முடியாது. சட்டப்படி சம்மன் அனுப்ப அவர்களுக்கு அதிகாரம் இல்லை. சட்டப் பிரிவு 17, 18- ன்படி அவர்கள் சோதனை செய்து பறிமுதல் செய்ய தான் அதிகாரம் உள்ளது. கைது செய்து காவ லில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை” என்று கூறினார்.
“நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜியை விடுதலை செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா?” என்ற நீதி பதி சி.வி. கார்த்திகேயனின் அடுத்த கேள்விக்கும் பதிலளித்த கபில் சிபல், “நீதிமன்ற காவலில் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை” என்றார். “அப்படியானால், கைது செய்வதற்கு முன்பு வரை வைத்துள்ள ஆதாரங்களே போதுமானது. கைதுக்கு பின், மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என்கிறீர்களா?” என்ற மற்றொரு கேள்வியை நீதிபதி முன்வைத்தார்.
அதற்கு “ஆமாம்” என்று கூறிய கபில் சிபல், “செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்கு சேர்க்க அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர் நீதிமன்ற காவலில் தொடர வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், மறுநாள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கி றது. குற்றம் சாட்டப்பட்ட எவரும் நீதிமன்ற நடை முறைகளை விரக்தியடையச் செய்ய முடியாது என அமலாக்கத் துறை, அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தது தவறானது. கிரிமினல் நடை முறைச் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. சி.ஆர்.பி.சி சட்டத்தின் படி, அதிகாரத்தை எடுக்க அமலாக்கத்துறைக்குத்தான் அதிகாரமில்லை.
அமலாக்கத்துறை என்பது போலீஸ் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் கைது அதிகாரம் என்பது வேறு மாதிரியானது. மணி லாண்டரி செய்து இருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். மணி லாண்டரி என்பது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது. அதாவது அழுக்கு துணியை மிஷி னில் போட்டு துவைப்பது போன்றது. பொதுவாக போலீஸ் ஒருவரை விசாரிக்கிறது என்றால், அந்த நபரைக் குற்றம் செய்தவராக கருதினாலே போதும். அவரை கைது செய்ய முடியும். அதன்பிறகு ஆதாரத்தை கண்டுபிடிக்க அவரை விசாரிக்க முடியும். ஆனால் அமலாக்கத்துறை, தனது விசாரணைக்காக ஒருவரைக் கைது செய்ய வேண்டும் என்றால், அதற்கு முதலில் ஆதாரம் வேண்டும். கைக்கு ஆதாரம் வந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரத்தை திரட்டுவதற்காக ஒருவரை கைது செய்து, அதன்பின் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கிடையாது. அதுமட்டுமல்ல, செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு வரை என்ன ஆதாரங்கள் இருந்ததோ, அதனை மட்டுமே அவர்கள் நீதிமன்றத்தில் பயன்படுத்த முடியும். கைது செய் யப்பட்ட பின், கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை நீதிமன்றத்தில் பயன்படுத்தவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை” என்று கபில் சிபல் விளக்கினார்.
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத் துறை, அதை ஏன் அமல்படுத்தவில்லை? அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் விசாரிக்க முடிய வில்லை என்றால், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடாதது ஏன்? என்றும் கபில் சிபல் கேள்விகளை எழுப்பினார். கபில் சிபலைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவும் தனது வாதங்களை எடுத்து வைத்தார்.
செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற விசாரணையின்போது, அமலாக்கத்துறை தரப்பு ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகவில்லை. அவர் புதன்கிழமையன்று தனது வாதங்களை எடுத்து வைக்க உள்ளார். இதனிடையே, செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்தால் அல்லது இடையீட்டு மனு தாக்கல் செய்தால் தங்கள் தரப்பின் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப் பிக்கக்கூடாது என அமலாக்கத்துறையினர் திடீரென உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை செவ்வாயன்று தாக்கல் செய்துள்ளனர்.