பாரா மெடிக்கல் எனப்படும் இணை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ் டூ மாணவர்கள் ஜூன் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கிகாரம் செய்யப்பட்ட சுய நிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுகீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. https://tnmedicalselection.net/ என்ற இணையத்தளம் வழியாக மட்டுமே 23.05.2024 முதல் 21.06.2024 அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தாரர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட விண்ணப்பத்தாரர்கள் மற்றும் தமிழ்நாட்டு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இணை மருத்துவ படிப்புகள்
B.PHARM
B.P.T.
B.ASLP
B.Sc. (NURSING)
B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY
B.Sc. RADIO THERAPY TECHNOLOGY
B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY
B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY
B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY
B.Sc. CARDIAC TECHNOLOGY
B.Sc. CRITICAL CARE TECHNOLOGY
B.Sc. DIALYSIS TECHNOLOGY
B.Sc. PHYSICIAN ASSISTANT
B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY
B.Sc. RESPIRATORY THERAPY
B.OPTOM
B.O.T
B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGY
B.Sc. CLINICAL NUTRITION
படிப்புகளும் பாடங்களும்
இந்த படிப்புகளில் B.Pharm, BASLP & B.Optom படிப்புக்கு விண்ணப்பிப்போர் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், மற்றும் விலங்கியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், கணிதவியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். நர்சிங் உள்ளிட்ட மற்ற அணைத்து பாடங்களுக்கும் இயற்பியல், வேதியியல் உயிரியல் பாடங்களை கண்டிப்பாக படித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல் தாவரவியல் மற்றும் விலக்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.06.2024 அன்று மாலை 5 மணிக்குள் https://tnmedicalselection.net/ என்ற இணையத்தளம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிப்பு குறித்த விபரங்களை PROSPECTUS FOR ADMISSION TO PARAMEDICALDEGREE COURSES பார்க்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க https://reg24.tnmedicalonline.co.in/pmc//MyCourse.aspx என்ற தளத்தின் மூலம் விண்ணப்பம் போட வேண்டும்.