அயோத்தியில் ராமர் சிலையை நிறுவ ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் ராமர் கோவிலை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் 251 மீ. உயரத்தில் வில் ஏந்திய ராமர் சிலை பிரமாண்டமாக நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அயோத்தியில் ராமர் சிலையை நிறுவிய உடன் கும்பாபிஷேக விழா நடத்தவுள்ளதாகவும், அந்த விழாவில் கலந்துக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஶ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கும்பாபிஷேக விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படலாம் என்றும் அதன் தேதி முடிவு செய்த பின் அறிவிக்கப்படும் என்றும் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் தெரிவித்துள்ளார்.
– கோ. தீபா புவனேஸ்வரி