வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புவோர், உடனே பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 1978-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறுவனமாக தொடங்கப்பட்டு வெளிநாட்டு வேலைநாடுநர்களை வெளிநாடுகளில் பணியமர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் இந்திய கம்பெனிகள் சட்டம், 1956-ன்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்திய குடிபெயர்வோர் சட்டம் 1983-ன் கீழ் ஆட்சேர்ப்பு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டு வேலைகளில் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உரிமம் பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் வலைதளம் www.omcmanpower.com என்ற தனியார் Domain-ல் இருந்து தமிழக அரசின் www.omcmanpower.tn.gov.in என்ற களத்தில் (Domain) மாற்றப்பட்டுள்ளது. எனவே வெளிநாடு செல்ல விருப்பமுள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவுசெய்து பயனடையுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

