இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், ‘’பாராமெடிக்கல் படிப்பு முடித்த 1376 பேரை போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்’’ என்று அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 16 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலிப்பணியிடம் : Paramedical Categories Various Post :1376
பணி விபரம் : Dietician | Nursing Superintendent | Audiologist & Speech Therapist | Clinical Psychologist | Dental Hygienist | Dialysis Technician |Health & Malaria Inspector Gr III | Laboratory Superintendent | Perfusionist | Physiotherapist Grade II | Occupational Therapist | Cath Laboratory Technician | Pharmacist (Entry Grade) | Radiographer X-Ray Technician | Speech Therapist | Cardiac Technician | Optometrist | ECG Technician | Laboratory Assistant Grade II | Field Worker |
முக்கிய தேதி :Application Begin : 17.08.2024 | Last Date for Apply Online : 16.09.2024 | | Last Date Pay Exam Fee : 16.09.2024
விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், சிறுபான்மையினர் அல்லது பொருளாதாரத்தில் பின் தங்கியவர் ( ) ஆகியோருக்கு தேர்வு கட்டணம் ரூ.250. மற்ற பிரிவினர் அனைவருக்கும் ரூ.500.
வயது : 1.1.2025 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். அதிகபட்சம் 43 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் விதிகளின் படி, வயது சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள 20 பணிகளுக்கும் தனித்தனியே வயது மற்றும் மருத்துவ குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, அதுகுறித்த முழு விபரத்தையும் அறிய https://www.rrbchennai.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிக்கையை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். ஆங்கிலம் வடிவில் வெளியான பாராமெடிக்கல் வேலைவாய்ப்பு அறிவிக்கையினை முழுவதுமாக படிக்க இங்கே
Paramedical_English_RRB_CEN _4_2024_ கிளிக் செய்யவும்.

இந்த வேலைக்கான போட்டித்தேர்வு எழுதுவோர்களுக்கான பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட பாடத்திட்ட வீடியோக்கள் #madrasmurasu www.youtube.com/@MadrasMurasu என்ற தளத்தில் உள்ளது. எனவே, அதை பார்த்து படித்து ரயில்வே பாரா மெடிக்கல் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.
எழுத்து தேர்வு ஒரு கட்டமாக மட்டுமே நடைபெறும். General awareness (10 வினாக்கள்), Arithmetic, General Intelligence & Reasoning (10) , General Science (10) , Professional ability (70 வினாக்கள் – தேர்வர்கள் விண்ணப்பிக்கும் பாடப்பகுதியில் இருந்து கேட்க்கப்படும். அதாவது நர்ஸ் வேலைக்கு விண்ணப்பித்தால், அந்த பாடத்தில் இருந்து 70 கேள்விகள் கேட்க்கப்படும்). மொத்தம் 100 வினாக்கள். ஒவ்வொரு வினாவுக்கும் ஒரு மதிப்பெண் . மொத்தம் 100 மதிப்பெண். கொள்குறிவகையிலான இந்த வினாவில் தவறான விடையை தேர்வு செய்திருந்தால் 1/3 மார்க் குறைக்கப்படும். பாடத்திட்டத்தை முழுமையாக படித்து பார்த்து இப்போதே தேர்வுக்கு தயாராகுங்கள்.