மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2006 சுருகெழுத்தர் Stenographer பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பும் அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பாஸ் ஆன சுருக்கெழுத்தர்கள் இந்த தேர்வுக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் துறைகளில் நியமனம் செய்ய 2006 சுருக்கெழுத்தர்கள் தேர்வு ( Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2024 ) நடைபெற இருக்கிறது. இதற்கு https://ssc.gov.in/ வழியாக ஆகஸ்ட் 17 வரை விண்ணப்பிக்கலாம். 12 ஆம் வகுப்பு பாஸ் ஆகி இருக்க வேண்டும்.
General Intelligence & Reasoning (50 கேள்விகள்), General Awareness (50 கேள்விகள்) , English Language and Comprehension (100 கேள்விகள்) ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்க்கப்படும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம், மொத்தம் 200 மதிபெண். தவறான விடையை தேர்வு செய்தால் 0.25 மதிப்பெண், ஒரு வினாவுக்கு குறைக்கப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் சுருக்கெழுத்து திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

Skill Test in Stenography: The candidates who are shortlisted in the Computer Based Examination will be required to appear in the Skill Test for Stenography. The candidates will be given one dictation for 10 minutes in English or Hindi (as opted by the candidates in the online Application Form) at the speed of 100 words per minute (w.p.m.) for the post of Stenographer Grade ‘C’ and 80 w.p.m. for the post of Stenographer Grade ‘D’.
இந்தி அல்லது ஆங்கிலத்தை தேர்வு செய்து திறன் தேர்வு சோதனையில் கலந்து கொள்ளலாம். இந்தி அல்லது ஆங்கில சுருக்கெழுத்தில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து திறன் தேர்வினை எழுதலாம். அதில் பெறும் மதிப்பெண், கொள்குறி வகையிலான எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் வேலை வழங்கப்படும். இப்போது, இந்தி சுருக்கெழுத்து தெரியவில்லை என்றால், வேலைக்கு சேர்ந்த பிறகு இந்தி சுருக்கெழுத்து பழகி, அதன் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும். இப்போது இந்தி சுருக்கெழுத்து தெரியவில்லை என்றாலும் இந்த தேர்வினை எழுதலாம். ஆங்கில சுருக்கெழுத்து தெரிந்து இருந்தால் மட்டும் போதும்.
இந்த தேர்வு குறித்த முழுமையான அறிவிக்கையை இங்கே Notice_of_steno_2024_07_26 கிளிக் செய்து முழுமையாக படித்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஸ்டேனோகிராபி எழுத்து தேர்வுகான பாடத்திட்டங்களை கொண்ட விடியோக்கள் மெட்ராஸ் முரசு யூடியூப் சேனலில் உள்ளது. www.youtube.com/@MadrasMurasu சப்ஸ்கிரைப் செய்து பார்த்து தேர்வில் எளியில் வெற்றி பெறலாம்.


