தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈராண்டு படிப்பு, மாதம் ரூ.5,000 உதவித்தொகை உண்டு.
1.தொல்லியல் – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம். மொத்தம் 20 இடங்கள்.
2. கல்வெட்டியல் – தமிழ், இந்திய வரலாறு, வரலாறு, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், வரலாறு மற்றும் தொல்லியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு முதுநிலைப் பட்டம். 10 இடங்கள்.
3. மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் – இளங்கலை கட்டப் பொறியியல் அல்லது மானிடவியல், சமூகவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், நிலவியல் ஆகிய படங்களில் முதுநிலைப்பட்டம். இடங்கள் 10.
எழுத்து தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு நடக்கும். ஈராண்டு படிப்பு. மாதம் ரூ.5,000 படிப்புதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு www.tnarch.gov.in இணையத்தில் பார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
எந்தெந்த இடங்களில் இந்த படிப்பு உள்ளது