’’நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மேலப்புதுக்குடியில் மின்னொளி கபடி போட்டி 29 ஆம் தேதி நடக்கிறது. மொத்த பரிசுத்தொகை ரூ.70,000. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் நேரிலோ அல்லது 9787462074 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு அணியின் பெயர்களை பதிவு செய்யலாம்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்துள்ள மேலப்புதுக்குடி பரிசுத்த யோவான் ஆலய 15-வது பிரதிஷ்டையை முன்னிட்டு தேவசகாயம் நினைவு கபடி குழு சார்பில் மின்னொளி கபடி போட்டி வருகிற 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி நடக்க இருக்கிறது. வீரவநல்லூர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ், கபடி போட்டியை தொடக்கி வைக்கிறார்.
ரூ.70 ஆயிரம் பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.11 ஆயிரமும் ரொக்கப்பரிகாக வழங்கப்படும். மேலும் முதல் 8 இடங்களுக்குள் வரும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் நேரிலோ அல்லது 9787462074 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘’மது அருந்தி விட்டு விளையாட அனுமதி இல்லை. விளையாட்டை மாற்றி அமைக்கும் உரிமை கமிட்டிக்கு உண்டு. நடுவரின் தீர்ப்பு உறுதியானது. நடுவரிடம் வாக்குவாதம் செய்யும் அணி வெளியேற்றப்படும். இஅவு 10 மணி வரை மட்டுமே நுழைவுக் கட்டணம் வாங்கப்படும். முதல் சுற்றில் விளையாடிய வீரர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு அனுமதிக்கப்படுவர்’’ என்று கபடி போட்டி விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.